உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

பட்டாசு பறிமுதல்சிவகாசி: சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை 28. இவர் மீனம்பட்டி தெற்கூரிலுள்ள தனது வீட்டிற்கு அருகே தகர செட்டில் பட்டாசு திரி, வெடி உப்பு அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.-------கொலை மிரட்டல்சிவகாசி: இ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் குருசாமி 55. இவரது தோட்டத்தின் அருகே உள்ள தோட்டத்தில் யாரோ தீ வைத்துள்ளனர். அப்போது அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரவி, ஏண்டா தீ வைத்தாய் என தகாத வார்த்தை பேசினார். தொடர்ந்து ரவி அவரது தாயார் மாரியம்மாள் ஆகியோர் குருசாமி வீட்டிற்கு வந்து அவரை தகாத வார்த்தை பேசி அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-------பெண் மீது தாக்குதல்சிவகாசி: திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்தவர் ஆனந்தம்மாள் 65. திருமணம் ஆகாத இவர் தனது உடன் பிறந்த சகோதரர் மகன் முனீஸ்வரனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். முனீஸ்வரன் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த முனிஸ்செல்வியை திருமணம் செய்தார். குடும்பத் தகராறில் முனிஸ்செல்வி விஷம் குடித்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்ப்பதற்காக வந்த ஆனந்தம்மாளை , முனிஸ்செல்வி தந்தை பொன் மாடசாமி தகாத வார்த்தை பேசி கம்பால் அடித்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு திரி விற்பனைவிருதுநகர்: திருத்தங்கல் அருகே பள்ளபட்டியைச் சேர்ந்தவர் பாலு 39. இவர்பிப். 4 ல் டூவீலரில் பட்டாசு தயாரிக்க 15 கட்டுகளில் 30 குரோஸ் வெள்ளை திரியை விற்பனைக்காக எடுத்துச்சென்றதை சூலக்கரைப் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சீனிவாசன் பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபர் தற்கொலைசிவகாசி: சுந்தரம் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் ரஞ்சித் 21. இவர் 15 நாட்களில் வெளிநாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் ,இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.-------டூவீலர் மாயம்சிவகாசி: பூசாரிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்கமுத்து 38. இவர் தனது ஆட்டுக்குட்டிகளுக்கு குடில்கள் அமைப்பதற்காக ரெங்கசமுத்திர பட்டியில் உள்ள தோட்டத்திற்கு டூவீலரில் சென்றார். அங்கு டூவீலரை நிறுத்திவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது திருடு போனது. மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை