மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
6 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
6 hour(s) ago
டூவீலர் மோதி ஆசிரியர் காயம்விருதுநகர்: கன்னியாகுமரி குமாரபுரத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் அய்யாதுரை 42. இவர் பிப். 13 மதியம் 1:30 மணிக்கு விருதுநகர் விளையாட்டு அரங்கத்தில் நடந்த போட்டியை பார்க்க சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது டூவீலரில் வந்த விருதுநகர் சக்திமாரியம்மன் கோயில்தெருவைச் சேர்ந்த ரவி 25 மோதியதில் அய்யாத்துரை காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.வங்கி மேலாளர் வீட்டில் நகை திருட்டுவிருதுநகர்: தாதம்பட்டி ரோடு இ.பி., காலனியைச் சேர்ந்தவர் முத்து 63. இவர் வங்கி மேலாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்றார். இவரின் வீட்டு பீரோவில் இருந்த 8 1/2 பவுன் நகை பிப். 11 ல் திருடுபோனது தெரியவந்துள்ளது. சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமி மாயம்விருதுநகர்: சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி 17. இவர் ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். பிப். 13 இரவு 7:00 மணிக்கு வீட்டில் இருந்தவரை காணவில்லை. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் பலிசாத்துார்: சாத்துார் நத்தத்துப்பட்டி யைச் சேர்ந்தவர் முத்து மனைவி அமிர்தவள்ளி, 45. தரகு வேலை செய்து வந்தார். பிப்.14ல் வெம்பக்கோட்டை வி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த பாலமுருகன், 48. டூ வீலரில் இருவரும் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் கோவில்பட்டி ரோட்டில் சின்னஓடைப்பட்டி விலக்கு அருகே சென்றபோது டூவீலரில் பின்னால் உட்கார்ந்து இருந்த அமிர்தவள்ளி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்தார். சாத்துார் அரசு மருத்துவமனையில் பலியானார்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.ஓட்டல் தொழிலாளி மாயம்சிவகாசி: சிவகாசி டி.கான்சாபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் 37. இவருக்கு திருமணம் ஆகி இரு மகன்கள் உள்ளனர். எம்.துரைசாமிபுரத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்த இவர் வழக்கம் போல வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago