உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் பா.ஜ., வேட்பாளர் தேர்வுக்கான கருத்து கேட்பு கூட்டம்

விருதுநகரில் பா.ஜ., வேட்பாளர் தேர்வுக்கான கருத்து கேட்பு கூட்டம்

விருதுநகர் : விருதுநகரில் பா.ஜ., சார்பில் லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் தேர்வுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தனர். மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மதுரை பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் சுப நாகராஜன் வழிகாட்டுதலில் நடந்தது.இதில் விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்துார், திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டசபை மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி, பிரிவு மாவட்ட தலைவர்கள், மண்டல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஜனநாயக முறைப்படி வேட்பாளராக மூன்று நபர்கள் பெயர்களை படிவத்தில் நிரப்பி அதை முறைப்படி மூடி சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் செலுத்தினர். அதை மூடி முத்திரை செய்யப்பட்டு மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை