உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் கொண்டாட்டம்

பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் கொண்டாட்டம்

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தின் பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா நடந்ததுவிருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.அலுவலர்கள், ஊழியர்கள் பராம்பரிய உடை அணிந்திருந்தனர் கோலப்போட்டியும் நடந்தது.விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் நடந்த பாரம்பரிய பொங்கல் விழாவில் துறை வாரியாக மாணவிகள், வண்ணக் கோலங்கள் இட்டும், தோரணங்கள் கட்டியும், கரும்பு, மஞ்சள் படைத்தும் தை பொங்கல் இட்டனர். கல்லுாரி தலைவர் பழனிச்சாமி, உப தலைவர் சிவபாலஈஸ்வரி, செயலாளர் கோவிந்தராஜபெருமாள், கூட்டு செயலாளர் லதா, பொருளாளர் ரவிசங்கர், கல்லுாரி முதல்வர் மீனாராணி பங்கேற்றனர்.* விருதுநகர் அன்பு இல்லம் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.முதன்மை நடுவர் நீதிபதி கவிதா, ஏ.டி.எஸ்.பி., சூர்யமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, இளஞ்சிறார் நீதிக்குழுமம் உறுப்பினர்கள் சதீஷ்குமார், ஜெபாகிறிஸ்டி, குழந்தைகள் நல குழுவினர் பங்கேற்றனர். காப்பக குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள், பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது.* எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழாவில் செயலாளர், தாளாளர் சர்ப்பராஜன், தலைவர் பழனிச்சாமி, உப தலைவர்கள் ரம்யா, ராஜமோகன், பொருளாளர் சக்திபாபு, முதல்வர் சுரேஷ்குமார் பங்கேற்றனர்.* ஸ்ரீவித்யா கலை கல்லுாரியில் குழும தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ் தலைமை வகித்தார். துணை தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். முதல்வர் கணேசன் விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து கல்லுாரிக்கு வந்திருந்தனர்.சாத்துார்: வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா குழு தலைவர் பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஒன்றியக் கவுன்சிலர்கள் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.*சாத்துார் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ் தலைமை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர் நிர்மலா முன்னிலை வகித்தார். சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது இந்தவிழாவில் தி.மு.க. ஒன்றியக்கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.* ஸ்ரீவில்லிபுத்தூர் செயின்ட் ஜோசப் ஆர். சி. பள்ளிகளின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவிற்கு தாளாளர் சந்தன சகாயம் தலைமை வகித்தார். உதவி பாதிரியார் செல்வநாயகம் முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சூரி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கள ரோஸ்மேரி, நர்சரி பள்ளி முதல்வர் ரஜிதா, அழகர்சாமி, கவுன்சிலர் சிவக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜும்ஆ புது பள்ளிவாசல் தலைவர் அப்துல் கலாம் ஆசாத், தலைமை இமாம் ரஹமத்துல்லா, ஜீயாவூதின் இமாம், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.*அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் வரலாற்று துறை சார்பாக பொங்கல் விழா நடந்தது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் நெகிழி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மஞ்சள் பை தூக்குவோம், மாசில்லாமல் வாழ்வோம் என மாணவர்கள் கும்மி பாட்டு பாடி அசத்தினர். மாணவர்கள் பட்டிமன்றம் நடந்தது. ஏற்பாடுகளை வரலாற்றுத் துறை தலைவர் சந்திரசேகரன், பேராசிரியர் செல்ல பாண்டியன் மற்றும் ரமேஷ் செய்தனர்.* ராஜபாளையம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் உறவின்முறை தலைவர் வடமலையான், மேல்நிலைப்பள்ளி செயலர் அழகர் ராஜன், மெட்ரிக் பள்ளி செயலர் கண்ணன் உள்ளிட்டோர் மாணவர்களுடன் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். மாணவர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.* முறம்பு மவுண்ட் சீயோன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகை கொண்டாடினர். ஏற்பாடுகளை தலைமையாசிரியை கல்யாண சுந்தரி ஆசிரியர்கள் அயோத்தி ராமன், பாலசுப்பிரமணியன், மாரியம்மாள், முனியசாமி செய்தனர்.* சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிகுரு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் கல்வி குழும தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாளாளர் பழனி குரு துவக்கி வைத்தார். கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. நிர்வாகி அதிகாரி தர்மராஜ், துறை பேராசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர்.* சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு மாடர்ன் சி.பி.எஸ்.இ., பள்ளி பொங்கல் விழாவில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை முதல்வர் சத்தியமூர்த்தி, ஆலோசகர் சித்ராதேவி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை