உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா..

பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா..

சாத்துார் : \ விருதுநகர் மாவட்டம் சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.சாத்துார் சிறு குளம் ஊராட்சியில் சுற்றுலாத்துறை சார்பில் பிரான்ஸ், போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சுற்றுலாப் பயணிகள், முக்கிய விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து சந்தனம் குங்குமம் விட்டு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன.* சாத்துார் கிருஷ்ணசாமி கல்லுாரியில் நடந்த விழாவில் தலைவர் ராஜு தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் உஷா தேவி வரவேற்றார். சீதாலட்சுமி, ஜாலி வசந்த் தனவிஷயன் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம் நடந்தது.* கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் தாளாளர் அருணாச்சலம் தலைமை வகித்தார். இயக்குனர் சண்முகவேல், முதல்வர் காளிதாசமுருகவேல் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் வேட்டி, சேலை அணிந்தனர். கயிறு இழுத்தல், உறியடித்தல், நடன பாட்டு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.*ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது. தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். விழாவில் 9 வகை பொங்கல் வைக்கப்பட்டது. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது.* லயன்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாவில் தாளாளர் வெங்கடாசலபதி தலைமை விகித்தார். லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சுந்தர மகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன் பங்கேற்றனர். பொங்கல் வைத்து கொண்டாடினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.* ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மகரிஷி மகேஷ் யோகி பிறந்தநாள், விவேகானந்தர் பிறந்தநாள், தைப்பொங்கல் கொண்டாட்டம், பள்ளி தாளாளர் குருவலிங்கம், அறங்காவலர் சித்ரா மகேஸ்வரி தலைமையில் நடந்தது.முதல்வர் கமலா, துணை முதல்வர்கள் ஜெயலட்சுமி, சரண்யா முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் சூரிய பகவானை வழிபட்டு பொங்கல் வைத்தனர். கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தது.* ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியலிங்கபுரம் விநாயகர் துவக்கப்பள்ளியில் பொங்கல் விழா, செயலர் ராமசாமி தலைமையில் நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.* விருதுநகர் கே.வி.எஸ்., நுாற்றாண்டு பள்ளியில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் பள்ளி செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். பராம்பரிய விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, கரகாட்டம் நடந்தது. பள்ளி தலைவர் கார்த்திகேயன், இணைச் செயலாளர் அருண், பொருளாளர் ரத்தினவேல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை