ஸ்ரீவில்லிபுத்துாரில் வேண்டும் ஸ்டாப்பிங் ரயில்வே துறைக்கு வலுக்கும் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்: செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி, வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக கொல்லம் செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை.இதனால் ரயில்வே நிர்வாகத்தின் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டாப்பிங் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.வைணவ ஆன்மிக தலங்களான திருப்பதிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் நெருங்கிய தொடர்புள்ள நிலையில், செகந்திராபாத்- -கொல்லம் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல வேண்டுமென சடகோபராமானுஜ ஜீயர், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி சரவணகார்த்திக் கோரிக்கை விடுத்தார். தொகுதி எம்.எல்.ஏ. மான்ராஜ், பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணா துரைராஜா, தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பொதுநல அமைப்புகளும் குரல் எழுப்ப துவங்கியுள்ளது.