உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விடுப்பில் வந்த ராஜபாளையம் ஆயுள் கைதி தலைமறைவு

விடுப்பில் வந்த ராஜபாளையம் ஆயுள் கைதி தலைமறைவு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சிறையில் இருந்து அவசர கால விடுப்பில் வந்த ஆயுள் தண்டனை கைதி சந்திரசேகர் 38, தலைமறைவானார். அவரை தளவாய்புரம் போலீசார் தேடுகின்றனர்.ராஜபாளையம் தளவாய்புரம் அருகே வேதநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி இசக்கியம்மாள். மகன் பிரதாப் 2. மனைவி மீது சந்திரசேகருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் 2009ல் பிரதாப் காணவில்லை. தளவாய்புரம் போலீஸ் விசாரணையில் மனைவியின் மீதான சந்தேகத்தில் சந்திரசேகர் மகன் பிரதாப்பை கொன்று வீட்டில் புதைத்தது தெரிந்தது. இவ்வழக்கில் சந்திரசேகருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.ஜன., 25 ல் மனைவி இசக்கியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மதுரை மத்திய சிறையில் இருந்து ஆறு நாட்கள் நன்னடத்தை விடுப்பு மூலம் வேதநாயகபுரத்திற்கு சந்திரசேகர் வந்தார். பிப்., 1ல் சிறைக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் சிறைச்சாலைக்கு செல்லாமல் தலைமறைவானார். மதுரை சிறை அலுவலர் முனீஸ் திவாகர் புகாரின்படி தளவாய்புரம் போலீசார் அவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை