உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடியிருப்பை சுற்றித் தேங்கிய மழைநீர் சிரமத்தில் ஸ்ரீவி., அசோக் நகர் மக்கள்

குடியிருப்பை சுற்றித் தேங்கிய மழைநீர் சிரமத்தில் ஸ்ரீவி., அசோக் நகர் மக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரில் குடியிருப்பை சுற்றி மழை நீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்பு ஆளாகி வருகின்றனர். தேங்கி உள்ள தண்ணீரை முழு அளவில் வெளியேற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 1வது வார்டின் ஒரு பகுதியான அசோக் நகரில் ஆண்டுதோறும் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இதில் பல்வேறு தெருக்களில் முறையான ரோடு, வாறுகால் வசதி இருந்தாலும், நகராட்சி பூங்கா பின்புறம் குடியிருப்பு பகுதிகளை சுற்றி கடந்த ஒரு மாதமாக மழை நீர் தேங்கி சுகாதாரக் கேடு, கொசுத்தொல்லை, விஷ பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி குழந்தைகள், முதியவர்கள், காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.தண்ணீரை முழு அளவில் வெளியேற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றவில்லை. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக பெய்த மழையினால் மேலும் தண்ணீர் தேங்கி மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கழிவுநீர் வாறுகால் போதிய ஆழமும், அகலமும் இல்லாததால் ரோட்டில் மழை நீர் தேங்கி நிற்கிறது.எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை முழு அளவில் வெளியேற்ற வேண்டுமென அசோக் நகர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை