உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடியிருப்போர் குரல்

குடியிருப்போர் குரல்

சிவகாசி: தெருக்களில் ரோடு, வாறுகால் சேதம், குடிநீர் பற்றாக்குறை என திருத்தங்கல் கே.கே., நகர் கருணாநிதி காலனி பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். இதுகுறித்து இப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகள் விஜயலட்சுமி, முனியம்மாள், அந்தோணியம்மாள், முத்துமாரி, வேளாங்கண்ணி கூறியதாவது, இப்பகுதியில் ரோடு அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்போது ரோடு முழுவதும் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இதில் டூவீலர் வருவதே சிரமமாக உள்ளது. மற்றும் தெருவில் ரோடு அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும் அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை. வாறுகாலில் செடிகள் முளைத்து துார்ந்திருப்பதோடு துார்வாரவும் இல்லை. இதனால் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் வெளியேற வழி இன்றி தெருவில் தேங்கி விடுகின்றது. வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. வாறுகாலில் சாக்கடை தேங்கி இருப்பதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது சமீபத்தில் இங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இரவில் கொசு தொல்லையால் பெரிதும் அவதிப்பட நேரிடுகிறது. எனவே கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். 25 நாட்களுக்கு ஒரு முறை வருகின்ற குடிநீர் அனைவருக்கும் போதவில்லை. மேலும் வருகின்ற குடிநீரும் கலங்கலாக வருவதால் குடிக்கப் பயன்படுத்தவும் முடியவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்த வேண்டி உள்ளதுதெருக்களில் நடமாடும் நாய்களால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். வீடுகளை ஒட்டிச்செல்லும் உயர் அழுத்த மின் ஒயரால் விபத்து அபாயம் உள்ளது. தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாததால் அவ்வப்போது எரிவதில்லை. இதனால் இரவில் வெளியில் மக்கள் நடமாட முடியவில்லை.இப்பகுதியில் இரு வார்டுகளுக்கு ஓட்டு உள்ளதால் எந்த கவுன்சிலர்களிடம் புகார் கூறினாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதோடு ரோடு வாறுகாலை உடனடியாக சீரமைக்க வேண்டும்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி