உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கரடு முரடான ரோடு, தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

 கரடு முரடான ரோடு, தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

சாத்துார்: சாத்துார் அமீர் பாளையத்தில் கரடு முரடான மண் ரோடு,திறந்த வெளியில் செல்லும் கழிவு நீரால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாத்துார் சத்திரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமீர் பாளையத்தில் நகரின் முன் பகுதி தெருக்களில் மட்டும் பேவர் ப்ளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. 18ம் படி கருப்பசுவாமி கோயிலுக்கு செல்லும் பாதை மண்சாலையாக உள்ளது. சிறிய மழை பெய்தாலும் பாதை முழுவதும் மழை நீரும் கழிவு நேரம் தேங்கி நிற்பதால் பாதை சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. கழிவுநீர் செல்வதற்கு வாறு கால் வசதி இல்லாத நிலையில் இந்தப் பகுதியில் வீடு கட்டி வசிப்பவர்கள் கழிவு நீர் செல்வதற்காக சோக் பிட் அமைத்துள்ளனர். சில வீடுகளில் சோக் பிட் நிறைந்து கழிவுநீர் வீடுகளுக்கு அருகில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதில் அதிக அளவு கொசு உற்பத்தி ஆவதால் இரவில் மட்டுமின்றி பகலிலும் கொசுக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆண்கள் பெண்களுக்கு என்ன சுகாதார வளாக வசதி இல்லாததால் மக்கள் திறந்த வெளியில் நாடிச் செல்வதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. கருப்பசுவாமி கோயிலுக்கு பின்புறம் புதியதாக நகர்கள் உருவாகி வரும் நிலையில் இந்த பகுதியில் ரோடு வாறுகால் உள்ளிட்ட வசதிகளை செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி