உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலரில் வைத்திருந்த ரூ.1.44 லட்சம் திருட்டு

டூவீலரில் வைத்திருந்த ரூ.1.44 லட்சம் திருட்டு

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் மேட்டமலையை சேர்ந்தவர் பழனிசாமி, 60. நேற்று முன தினம் ஊரில் வாங்கிய கடனை அடைப்பதற்காக சாத்துார் இந்தியன் வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ 1.80 லட்சத்தை எடுத்துள்ளார்.பின்னர் அதே வங்கியில் நகை கடனுக்காக ரூ 36 ஆயிரத்தை கட்டியுள்ளார். மீதி பணம் ரூ 1.44 லட்சம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, உழவர் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை ஒரு பேக்கில் வைத்து வங்கி வாசலில் நின்ற தனது இருசக்கர வாகனத்தில் முன்புள்ள டேங்க் கவரில் வைத்து விட்டு அருகில் இருந்த காலியிடத்தில் சிறுநீர் கழிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கில் இருந்த பேக் திருட்டு போயிருந்தது. சாத்துார் போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை