உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரஷ்ய பண்பாட்டு திருவிழா

ரஷ்ய பண்பாட்டு திருவிழா

சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை சார்பில் ரஷ்ய பண்பாட்டுத் திருவிழா நடந்தது.கல்லுாரி துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். கல்லுாரி செயலர் செல்வராஜன் துவக்கி வைத்தார். இந்தோ ரஷ்யா வர்த்தக மற்றும் தொழில்துறை ரஷ்ய பண்பாட்டு விழா ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் பேசுகையில், இந்திய - ரஷ்யா உறவு இருநாட்டு தலைவர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் வலுப்பெற்றுள்ளது. ரஷ்ய நாட்டு கலைஞர்கள் இந்தியாவிற்கும் இந்திய கலைஞர்கள் ரஷ்ய நாட்டிற்கும் சென்று தமது கலாச்சார பண்பாட்டினை பரப்ப முன் வர வேண்டும், என்றார்.ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 19 நடன கலைஞர்கள் கோரோவுட், கெசல் போன்ற பாரம்பரிய நடனம் ஆடினர். ஜெயந்தி வெங்கட், முபிதா, காபினி ஒருங்கிணைத்தனர். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை