உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரி மலையில் மதுபாட்டில்

சதுரகிரி மலையில் மதுபாட்டில்

வத்திராயிருப்பு:சதுரகிரியில் நடக்க உள்ள ஆடி அமாவாசை விழாவையொட்டி திருட்டுத் தனமாக விற்பனை செய்ய மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக வனத்துறையின ருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சாப்டூர் வனச்சரகர் கருமலையான் தலைமையில் வனத்துறையினர் சோதனைக்கு சென்றனர். அப்போது பச்சரிசி மேடு என்ற இடத்தில் மதுரை மாவட்டம் சாப்டூரை சேர்ந்த பால்பாண்டி தலை சுமையுடன் சென்றார். அவரை வனத்துறையினர் சோதனை செய்ததில், 30 பிராந்தி பாட்டில்கள் இருந்தன. ''திருவிழாவின் போது கூடுதல் விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றதாக'' தெரிவித்தார். இதை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை