| ADDED : ஜன 14, 2024 11:43 PM
திருச்சுழி, : திருச்சுழி உடையனம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பழனிவேல், ஆசிரியர் சண்முக ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் சுதா வரவேற்றார். பள்ளித் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் திருச்சுழி எஸ்.ஐ., வீரணன் பரிசுகள் வழங்கினார். குச்சம்பட்டி ஊராட்சி தலைவர் சாமிகண்ணு, இன்பம் பவுண்டேஷன் நிர்வாகிகள் விஜயகுமார், தமிழரசி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாந்திபிரியா, ஒருங்கிணைந்த கல்வி வட்டார மேற்பார்வையாளர் செந்தில்ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.