| ADDED : டிச 27, 2025 06:08 AM
கிறிஸ்துமஸ் விழா சிவகாசி: சிவகாசி மாரனேரி கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பள்ளி தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். மாணவி வர்ணிதா வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி சாந்தியா நன்றி கூறினார். ---புரிந்துணர்வு ஒப்பந்தம் சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியின் இளங்கலை வணிகவியல் துறை, மதுரை மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கம் சார்பில் மதுரையுடன் தொழில் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பித்தல் விழா நடந்தது. சங்க செயலாளர் அசோக், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன், மதுரை மாவட்ட சங்க தலைவர் செந்தில்குமார் கையெழுத்திட்டனர். கல்லுாரி செயலாளர் கூறுகையில், பயிற்சிகள், தொழில் துறை வருகைகள், பயிற்சி திட்டங்கள் விருந்தினர் சொற்பொழிவுகள், திறன் மேம்பாட்டு முயற்சிகள் தொழில் முனைவோர் ஆதரவு மூலம் மாணவர்களுக்கு மேம்பட்ட வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், என்றார். ஏற்பாடு களை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கிருத்திகா செய்தார். விவசாயிகளுக்கு பயிற்சி சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் தாவரவியல் துறை சார்பில் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். துறை தலைவர் தீபா வரவேற்றார். மதுரை இயற்கை பயிற்சியாளர் விஜயகுமார் பேசினார். செய்முறை பயிற்சி,இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகள், மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் ஆனந்த ஜோதி நன்றி கூறினார். விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவகாசி: சிவகாசி இன்ஸ்டிடியூட் ஆப் பிரிண்டிங் டெக்னாலஜி பாலிடெக்னிக் கல்லுாரியில் ரெடிங்டன், லெர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் குழுமம் சார்பில் மாணவர்களின் டிஜிட்டல் திறன்கள் தொழில்நுட்ப புரிதலை மேம்படுத்தும் நோக்கில் டிஜிட்டல் கல்வி அறிவு புதுமை தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பால கணபதி துவக்கி வைத்தார். ரெடிங்டன், லெர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் குழுமம் ப்ரோக்ராம் மேனேஜர் கனகராஜ் பேசினார். 230 மாணவர்கள் கலந்து கொண்டனர்.