பட்டாசு பறிமுதல்: கைது 4
சாத்துார்: சாத்துார் கண்மாய் சூரங்குடியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 55. மேட்டமலையில் உள்ள வாடகை கடையில் தகர செட் அமைத்து அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை விற்பனைக்காக வைத்திருந்தார்.சிவகாசி சேர்ந்தவர் குமரேசன் 30, சின்னக் காமன் பட்டி வீரக்குமார், 31. இருவரும் முத்தால்நாயக்கன்பட்டியில் இவர்கள் நடத்தி வரும் பட்டாசு கடையில் அரசு அனுமதி இன்றி சரவெடிகளை விற்பனைக்காக வைத்திருந்தனர். ஏழாயிரம் பண்ணை கோவில் செல்லையாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் 42, இவர் வீட்டுக்கு அருகில் பேன்சி ரக பட்டாசுகளை தயார் செய்தார். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து 4 பேரையும் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.