உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெம்பக்கோட்டை வைப்பாற்றில் கலக்கும் கழிவு நீர்: அதிருப்தியில் விவசாயிகள்

வெம்பக்கோட்டை வைப்பாற்றில் கலக்கும் கழிவு நீர்: அதிருப்தியில் விவசாயிகள்

சிவகாசி: வெம்பக்கோட்டை வைப்பாற்றில் கழிவு நீர் கலப்பதாலும் , குப்பை கொட்டப்படுவதாலும் தண்ணீர் வந்தும் வீணாவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.வெம்பக்கோட்டை அருகே வைப்பாறு செல்கிறது. இந்த ஆற்றில் வெம்பக்கோட்டையின் மொத்த கழிவு நீரும் கலக்கிறது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி ரோட்டில் உள்ள ஓடையில் கழிவு நீர் விடப்பட்டு ஊருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டது. தற்போது வாறுகாலில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் ஓடைக்குச் செல்ல வழி இல்லை. எனவே கிராமத்தின் மொத்த கழிவு நீரும் ஆற்றுக்குள் விடப்படுகின்றது.இப்பகுதி கடைகளின் குப்பை கழிவுகளும் அதில் தான் கொட்டப்படுகின்றது. ஆற்றில் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த கழிவு நீர் அதில் கலப்பதால் குடிநீருக்கும் பயன்படவில்ல. விவசாயத்திற்கும் , குடிநீர் ஆதாரமாகவும் பயன்படும் இந்த வைப்பாறு கழிவு நீரால் ஏதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் சென்றும் ஆற்றின் பாலத்தை கடந்தாலே துர்நாற்றத்தால் அவதி பட நேரிடுகிறது. எனவே, முன்பு போலவே சிவகாசி ரோட்டில் உள்ள ஓடையில் கழிவு நீரை விடச் செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வைப்பாற்றில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை