உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாக்கடை தேங்கி கொசுத்தொல்லை

சாக்கடை தேங்கி கொசுத்தொல்லை

விருதுநகர்:விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு ஊராட்சி அரசக்குடும்பன்பட்டியில் 6வது வார்டு ஊர் நாட்டாண்மை தெருவில் நடைபாதை சாக்கடை தேங்கியுள்ளது. கொசு அதிகமாக உள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கழிவுநீர் தேக்கத்தால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த தெருவிற்கு வாறுகால் அமைத்து தர கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ