உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம்:  வீடு வீடாக வழங்கும் பணி துவக்கம்

எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவம்:  வீடு வீடாக வழங்கும் பணி துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படும் பணிகள் துவங்கியது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நேற்று(நவ. 4) முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் ஒட்டுச்சாவடி அலுவலர்களால் வழங்கும் பணி துவங்கியது. விருதுநகர் மாவட்டத்தில் 2025 ஜன. 5ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 16லட்சத்து 09 ஆயிரத்து 224 பேர் ஆகும். ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 85 ஆயிரத்து 132, பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 23 ஆயிரத்த 836, இதர வாக்காளர்கள் 256 ஆகும். இதில் ஒருவரையும் விடுபடாமல் அனைவரும் சிறப்பு தீவிர திருத்த பட்டியலுக்கான கணக்கெடுப்பு படிவம் வழங்க மும்முரம் காட்டி வருகிறது மாவட்ட நிர்வாகம். வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதனுடன் எந்தவொரு ஆவணத்தையும் அப்போது இணைத்து வழங்கத் தேவையில்லை. வாக்காளர்கள் தங்களது பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதன் விபரத்தை கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத நபர்கள், தங்கள் குடும்ப நபர்கள், உறவினர்கள் பெயர்கள் 2002 பட்டியலில் இடம் பெற்றிருந்தால், அதன் விபரத்தையும் குறிப்பிடலாம். கணக்கெடுப்பு படிவங்கள் வழங்குதல், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெறுவது போன்ற பணிகள் 2025 நவ. 4முதல் 2025 டிச. 4 வரை நடக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. படிவங்களை சமர்ப்பித்த பின் வரைவு பட்டியல் டிச. 9ல் வெளியாகும். டிச. 9 முதல் 2026 ஜன. 8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோருதல், ஆட்சேபணைகள் தெரிவித்தல், திருத்தம் செய்யக் கோருதல் போன்ற படிவங்கள், கோரிக்கைகள் பெறப்பட்டு, அப்படிவங்களுடன், ஏற்கனவே பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் மீதும் 2025 ஜன. 31 வரை விசாரிக்கப்பட்டு பிப். 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை