உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் சஸ்பெண்ட்

 சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் சஸ்பெண்ட்

சிவகாசி: சிவகாசியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் கோட்ட செயற் பொறியாளராக பணி செய்து வருபவர் பத்மா. இவர் தனது அலுவலக அறையின் சேரில் அமர்ந்தபடி கையில் வைத்திருக்கும் 500 ரூபாய் நோட்டுகளை எண்ணும் வீடியோ இரு வாரங்களுக்கு முன்பு வெளியானது. அரசு அலுவலகத்தில் தனது அறையிலேயே உயரதிகாரி கையில் வைத்திருந்தது லஞ்ச பணமா என்ற சந்தேகம் எழுந்தது. வீடியோ விவகாரம் குறித்து துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாநில மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பத்மாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் செயற்பொறியாளராக பணியாற்றிய பாபநாசத்தை சிவகாசி கோட்ட செயற்பொறியாளராக நியமித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை