உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

சிவகாசி, : சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் கலை மற்றும் அறிவியல் துறை, கட்டடக்கலை துறை, உடற்கல்வித்துறை சார்பில் மெப்கோ ஸ்போர்ட்ஸ் பெஸ்ட், ராடிக்ஸ் 24 என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு, கருத்தரங்கு விழா நடந்தது. இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் சிவகாசி விருதுநகர் மதுரை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 920 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஆறு முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 11 ஆவது மாணவர்களுக்கு சீனியர் பிரிவிலும் தனித்தனியே போட்டிகள் நடந்தது. முதல் நாளில் மாணவர்களுக்கு இறகுபந்து, கூடைப்பந்து, வலைப்பந்து சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இரண்டாம் நாளில் பேச்சு, கட்டுரை, மாடல் பிரசன்டேஷன், ஓவியம் வினா விடை போட்டிகள் நடந்தது. சிறப்பு விருந்தினர் சாமுவேல் ஞானதுரை பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சிவகாசி ஒய்.ஆர்.டி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி