மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
6 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
6 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த டிரைவர் சந்திரசேகர் 45, தீக்குளித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் விடுமுறை நாளான நேற்று நீதிமன்ற வளாகம் வெறிச்சோடியிருந்தது. அவசர பணிக்காக ஒரு சில ஊழியர்கள் மட்டும் நீதிமன்றத்தில் பணிபுரிந்தனர். நேற்று காலை 11:30 மணிக்கு கோவில்பட்டி மந்திதோப்பைச் சேர்ந்த டிரைவர் சந்திரசேகர் ஒரு பேக்குடன் நீதிமன்றம் வளாகத்திற்குள் வந்தார். கேன்டீன் திண்ணையில் தான் கொண்டு வந்த பேக்கை வைத்துவிட்டு நீதிமன்ற பிரதான வாயிலை நோக்கி சென்றவர், கேனில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டு ரோட்டில் அலறி விழுந்தார். பின் அவர் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசு அவரிடம் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago