உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ‛நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

 ‛நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

விருதுநகர், டிச. 26 - ஸ்ரீவில்லிப்புத்துார் ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை (டிச. 27) நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் ரத்தம், சர்க்கரை அளவு, கல்லீரல், சிறுநீரகம், இ.சி.ஜி., உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், குறிப்பாக கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள், நலவாரிய ஒய்வூதியர்கள் ஆதார் அட்டையுடன் பங்கேற்கலாம்'' என மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் காளிதாஸ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை