| ADDED : ஜன 01, 2024 05:02 AM
விருதுநகர்; விருதுநகர் காளிமார்க் கே.பி. கணேச நாடார் - சரோஜா சுழல்கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டி நேற்று ( டிச. 31) துவங்கி ஜன. 1, 2 என மூன்று நாட்கள் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இந்த போட்டியின் துவக்க விழாவில் கே.வி.எஸ்., நிர்வாகத்தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நிர்வாக செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ரத்தினவேல் உடனிருந்தனர்.இந்த போட்டியில் சென்னை, விழுப்புரம், நெய்வேலி, கடலுார், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், கோவில்பட்டி, சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 27 அணிகள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.