| ADDED : ஜன 15, 2024 04:52 AM
சாத்துார் : சாத்துார் கிருஷ்ணசாமி கல்லுாரியில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.கல்லுாரி தலைவர் ராஜு தலைமை வைத்தார். முதல்வர் உஷாதேவி முன்னிலை வகித்தார். முன்னாள் இந்திய கபடி வீரர் கணேசன் பேசினார்.தமிழகத்தின் பல்வேறு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.மாணவர் பிரிவில் முதல் பரிசை கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராசர் மேல்நிலைப்பள்ளி, 2ம் இடத்தை வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி, 3ம் இடத்தை மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் வென்றது.மாணவிகள் பிரிவில் முதல் இடத்தை கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 2ம் இடத்தை ஓ.மேட்டுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 3ம் இடத்தை மீனாட்சி புரம் ரோமன் கத்தோலிக்க மேல்நிலைப்பள்ளியும் வென்றது.உடற்கல்வி பேராசிரியர்கள் கோகுல் கிருஷ்ணன், பிரேம் குமார், தமிழ் துறை உதவி பேராசிரியர் நந்தகுமார் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.