மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்
வி ருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், குருஞானசம்பந்தர் ஹிந்து மேல்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், நேற்று தன் தாய் மனநல சிகிச்சைக்கு சாப்பிடும் மாத்திரையை பள்ளிக்கு கொண்டு வந்து, தானும் சாப்பிட்டு, சக நண்பர்கள் மூன்று பேருக்கும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில், நான்கு மாணவர்களும் மயங்கினர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர்.