மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்
15 hour(s) ago
கோடவுனில் தீ விபத்து
15 hour(s) ago
ஊருணி தடுப்புச்சுவர் சேதம்: மாணவர்கள் அச்சம்
15 hour(s) ago
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
15 hour(s) ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகள் உருவாகி பல ஆண்டுகள் ஆகியும் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பாலையம்பட்டி ஊராட்சி . இதில், திருக்குமரன் நகர், பசும்பொன் நகர், ராஜிவ் நகர், தீர்த்தக்கரை, சிலோன் காலனி, வேல்முருகன் காலனி, இந்திரா நகர், காமராஜர் நகர் உட்பட 10 க்கும் மேற்பட்ட புறநகர் பகுதிகள் உள்ளன. இவைகள் உருவாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன போதிலும், தேவையான வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனர்.பல தெருக்களில் வாறுகால் வசதியின்றி கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. தார் மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதித்த ரோடுகளை ஜல்ஜீவன் குடிநீர் பகிர்மான குழாய் அமைப்பதற்காக அனைத்து தெருக்களிலும் தோண்டப்பட்டு பணிகள் முடிந்த பின்பு சரி செய்யாமல் விட்டு விட்டனர். இதனால் தெருக்களில் டூவீலர்களில் செல்ல முடியவில்லை. இரவு நேரங்களில் தடுமாறி விழ வேண்டி உள்ளது.புறநகர் பகுதிகளில் போதுமான தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் உட்பகுதியில் செல்ல மக்கள் பயப்படுகின்றனர். சீதாலட்சுமி நகர், திருக்குமரன் நகர் உட்பட புறநகர் பகுதிகளுக்கு இவற்றின் கடைசியில் உள்ள கடம்பன்குளம் கண்மாய் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதில் 10 க்கும் மேற்பட்ட போர்வெல்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் நடக்கிறது.கண்மாய் பராமரிப்பு இன்றி உள்ளது. புறநகர் பகுதிகளின் ஒட்டுமொத்த கழிவு நீரும் கண்மாயில் சேருகிறது. கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சுகின்றன. கண்மாயை பராமரிப்புச் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கண்மாயை பராமரிப்புச் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புறநகர் பகுதிகளுக்கு ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் குப்பை வாங்க வருவதில்லை பாலையம்பட்டி பகுதி மெயின் ரோடு ஓரங்களில் குப்பை கொட்டி எரிப்பதால் சுகாதார கேடாக உள்ளது.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago