உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீச்சல் குளங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் குறையுது! விபத்துக்களை தடுக்க கண்காணிப்பு அவசியம்

நீச்சல் குளங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் குறையுது! விபத்துக்களை தடுக்க கண்காணிப்பு அவசியம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீச்சல் குளங்களில் பாதுகாப்பு முறைகள் சரிவர பின்பற்றப்படுகிறதா என்ற ஆய்வு குறைந்து வருகிறது. விபத்து அபாயத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார், அரசு நீச்சல் குளங்களிலும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி செயல்பட 2023 ஏப்.ல் கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டிருந்தார். அதில் நீச்சல் பயிற்றுநர்கள், பயிற்றுநருக்கான கல்வித்தகுதி என்.ஐ.எஸ்., சான்று கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்றும், நீச்சல் குளத்தின் வெளிப்புறத்தில் குறைந்தபட்சம் 2 உயிர்க்காப்பாளர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு, பெண் பயிற்சியாளர்கள் மூலம் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள் குறைந்து வருகின்றன. நீச்சல் குளத்தினுள் பாதுகாப்பு பொருட்கள் இருக்க வேண்டும். குளத்தில் நீரின் நிறம் மாறாமல் இருக்க தகுந்த குளோரின் அளவு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 10 முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுந்த துணையோடு வந்துள்ளனரா என்பதை உயிர்க்காப்பாளர், நீச்சல் பயிற்சியாளர்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் முறையாக கண்காணிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் நீச்சல் குளங்களில் இத்தகைய பாதுகாப்பு முறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க அடிக்கடி ஆய்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை