மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
16 minutes ago
ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
37 minutes ago
அரசு பள்ளி மாணவர்கள் யோகாவில் உலக சாதனை
39 minutes ago
பட்டாசு பறிமுதல்
14-Nov-2025
விருதுநகர்: ஒருவரது கையிலே இருக்கக் கூடிய ஆபரணங்களிலே சிறந்த ஆபரணம் என்றால் அது புத்தகம் ஒன்றே, என விருதுநகரில் 4வது புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார் விருதுநகர் மதுரை ரோட்டில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த புத்தகத் திருவிழா துவக்க விழாவில் கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், மேயர் சங்கீதா, எஸ்.பி., கண்ணன் முன்னிலையில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர். சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: புத்தகங்களை படிக்கிற நேரத்தில் மனிதனுக்கு இயற்கையாக அறிவு சிந்தனை வளரும். தனக்குள் எழும் கேள்விக்கு உரிய பதிலும் அந்த புத்தகத்திலேயே ஒருவருக்கு கிடைக்கும். புத்தகம் படிப்பதன் வாயிலாக அறிவுத்திறன் மட்டுமல்ல, உலகம் எப்படி இருந்தது, நமக்கு முன்னாலே இருந்த உலகம் எப்படி இருந்தது, அரசர் காலத்திலே எப்படி இருந்தார்கள், தற்பொழுது எவ்வாறு உள்ளது, எதிர்காலத்தில் நம்முடைய நாடு எவ்வாறு இருக்க வேண்டும் போன்றவற்றையெல்லாம் தெரிந்துக் கொள்ளலாம், என்றார். தங்கம் தென்னரசு பேசியதாவது: புத்தகக் கண்காட்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தினை வடிவமைக்க வேண்டுமென்றால், அந்த சமுதாயம் முற்றிலும் அறிவார்ந்த சமுதாயமாக அமைந்தால் மட்டுமே இது சாத்தியம். விருதுநகரின் பண்பாட்டு விழுமியங்களையும், நாகரீகங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை கூறும் வெம்பக்கோட்டை அகழ்வாய்வுகள் என பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவரது கையிலே இருக்கக் கூடிய ஆபரணங்களிலே சிறந்த ஆபரணம் என்றால் அது புத்தகம் ஒன்றே, என்றார். டி.ஆர்.ஓ., ஆனந்தி, திட்ட இயக்குநர், கேசவதாசன், சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான், நகராட்சித் தலைவர் மாதவன் பங்கேற்றனர்.
புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 33ல் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா ஸ்டாலில் சந்தா ஒன்று பலன் மூன்று சலுகை வழங்கப்படுகிறது. ரூ.1999 செலுத்தி ஆண்டு சந்தாவில் இணைந்தால் ஓராண்டிற்கான தினமலர் நாளிதழ், ரூ.5 லட்சத்தில் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன. சந்தா செலுத்தினால் கூடுதல் பலனாக ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்களை தாமரை பிரதர்ஸ் அரங்கில் நீங்களே தேர்வு செய்துக் கொள்ளலாம்.
16 minutes ago
37 minutes ago
39 minutes ago
14-Nov-2025