உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துறைகளிடையேயான ஈகோவால் மண் போட்டு மூடிய ரூ.3 கோடி சுரங்கப்பாதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டால் மட்டுமே தீர்வு

துறைகளிடையேயான ஈகோவால் மண் போட்டு மூடிய ரூ.3 கோடி சுரங்கப்பாதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டால் மட்டுமே தீர்வு

ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதை பணி முடிந்து இணைப்பு சாலைக்கு இடம் கொடுப்பதில் நகராட்சி , ரயில்வே துறையினரிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னையில் ரூ.3 கோடி சுரங்கப்பாதை மண் போட்டு மூடிய கொடுமையால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர்.ராஜபாளையம் நடுவே செல்லும் ரயில்வே தண்டவாளத்தை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் நெரிசலில் மேம்பாலம் வழியே ஏறி செல்லாமல் சுரங்கப்பாதை மூலம் சுலபமாக கடக்க 12 மீ., அகலம் 800 மீ., நீளத்தில் ரூ.3 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.ரயில்வே சார்பில் கான்கிரீட் பிளாக்குகள் புதைக்கப்பட்டு மின் வழித்தட கம்பிகள் மாற்றி, சுரங்கப்பாதைக்கான கார்டர்கள் பொருத்தப்பட்டு ரயில்வே தரப்பில் பணிகள் முடிந்த நிலையில் நகர் பகுதியோடு இணைக்கும் பணிக்கு போதிய இடம் இல்லை என்று சிக்கல் ஏற்பட்டது.சாலைக்கு போதிய இடம் ரயில்வே நிர்வாகம் விட்டு தர வேண்டும் என நகராட்சியும், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டம் தானே என நெடுஞ்சாலை துறையும் தெரிவிக்கும் நிலையில் பிரச்னை பல மாதங்களாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர்ந்து ஏற்பட்ட தாமதத்தால் சுரங்கப்பாதையின் நிலைத்தன்மை, அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க என ரயில்வே நிர்வாகத்தினர் மண் போட்டு மீண்டும் மூடி விட்டனர். நெரிசல், எரிபொருள் விரயம் போன்ற சிக்கல்களை மக்கள் தினமும் சந்தித்து வருகின்றனர்.இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டால் மட்டும தீர்வு கிடைக்குமென மக்கள் நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை