உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நாற்று நடும் போராட்டம்

 நாற்று நடும் போராட்டம்

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே அய்யனாபுரம் மேட்டு தெருவில் மா.கம்யூ., சார்பில் சகதியில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. அய்யனாபுரம் மேட்டு தெருவில் மண் ரோட்டை செப்பனிடக்கோரி பல மாதங்களுக்கு முன்பே மார்க்சிஸ்ட் சார்பில் அடையாளப் போராட்டம் நடந்தது. அப்போதைய பேச்சு வார்த்தையில் விரைவில் சாலை புதுப்பிக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். 9 மாதங்கள் கடந்த நிலையிலும் சாலை அமைக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் குருசாமி தலைமையில் சாலையில் தேங்கியிருந்த சகதியில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சமாதானத்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை