மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் மூலம் இயற்கையை காக்கும் நண்பர் குழு
30-Dec-2024
பொது இடங்களாக இருந்தாலும் சரி, நாம் வசிக்கும் இடமாக இருந்தாலும் சரி, சுற்றுப் புறத்தை எப்போதும் துாய்மையாகவும், அழகாகவும் வைக்க வேண்டும் என்பது அனைவரது எண்ணம்.பெரும்பாலானவர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. அதில் கவனம் செலுத்துவதும் கிடையாது. மாணவர்களுக்கு அப்படி கிடையாது. கற்றுக் கொடுத்தால் போதும், எதையும், எதிலும் சாதிப்பர். பாடம் படிப்பது முக்கியம். அதை விட சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டியதும் அவசியம்.மரம், செடி, கொடிகளை வளர்த்து பேணி காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மாணவர்களை ஊக்குவித்தால் போதும். எந்த இடத்தையும் அழகாக்கி காட்டுவர். அந்த அடிப்படையில் நரிக்குடி முத்தனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை, சுற்றுச் சூழல் மன்றம் ஏற்படுத்தப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பூஞ்சோலையாக மாற்றி காட்டி மாணவர்கள் அசத்தி உள்ளனர். முகப்பில் பூவரசு மரக்கன்றுகளை நட்டு வளர்த்தனர்.தற்போது இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்துடன் குளுமையாக இருக்கிறது. எந்த சீசனிலும் மனதுக்கு இதமான சூழ்நிலையுடன் ரம்மியமாக இருக்கிறது. பின்புறத்தில் வேம்பு, நீர் மருது, மஹோகணி, பூவரசு, அசோக மரம், செங்கொன்றை, கொடிக்காய், கொய்யா, பப்பாளி, முள் முருங்கை, தங்க அரளி, செவ்வரளி, பட்டன் ரோஸ் பூச்செடிகள் வளர்த்ததுடன், தோட்டம் அமைத்து தக்காளி, வெண்டை, அவரை, பூசணி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகளும், துளசி, கற்றாழை, கரிசாலை உள்ளிட்ட மூலிகை செடிகள் வளர்த்து சாதித்தனர்.ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்கள் மீது அன்பு செலுத்தி அரவணைத்து செல்வதால் பள்ளி வளாகம் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்து வருகிறது என்றால் உண்மையிலே பெருமையாக இருக்கிறது.
30-Dec-2024