உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  லாப காய் பெறுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் --

 லாப காய் பெறுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் --

சேத்துார்: லாப காய் எனும் பெயரில் தென்னை விவசாயிகளிடம் வியாபாரிகள் பெறுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேத்துாரில் விவசாயிகள் சங்க 2 வது மாவட்ட மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநில குழு உறுப்பினர் பீம ராஜா தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தங்கவேல், அமுல் ராஜ் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா தலைவர் அப்பாஸ் வரவேற்றார். மாநில பொதுசெயலாளர் விஜய முருகன், துணை தலைவர் முத்துராமு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் விற்பனை செய்யப்படும் தேங்காய்களுக்கு லாப காய் அல்லது கழிவு காய் எனும் பெயரில் வியாபாரிகள் 100 காய்க்கு 15 காய்களை விவசாயிகளிடம் பெறுகின்றனர். இந்த நடைமுறையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தென்னை பயிர்களுக்கு காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தை சேர்க்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்படும் தென்னை விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதுடன் தாமதிக்காமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா உட்பட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !