உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி

பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி

சிவகாசி ; விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் புதிய குழிகள் தோண்டப்பட உள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி நடந்தது.விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 14 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, தங்க மணி உள்ளிட்ட 2480க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே தோண்டப்பட்ட 14 குழிகளில் அகழாய்வு பணி நிறைவு பெற உள்ள நிலையில் புதிய குழிகள் தோண்டப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை ஆவணப் படுத்தும்பணி நடந்தது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில்'' இங்கு முன்னோர்கள் தொழிற்கூடம் நடத்தியதற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. அதன்படி முழுமையான பானைகள், உடைந்த பானை ஓடுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது வரை 14 குழிகளில் அகழாய்வு பணிகள் முடிந்துள்ளது. அடுத்ததாக புதிய குழிகள் தோண்டப்பட உள்ளன. இதற்கிடையில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை