மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
ராஜபாளையம் : மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பின் படி 3405 பறவை இனங்கள் இருப்பது கண்டறிப்பட்டது, என ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார்.ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் வனத்துறை, மேகமலை புலிகள் சரணாலயம், கல்லுாரி சார்பில் ஈர நிலங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து கருத்தரங்கில் அவர் கூறுகையில், ஈரானில் 1971ம் ஆண்டு சர்வதேச முக்கியத்துவமான ஈர நிலங்களை பாதுகாப்பது தொடர்பான மாநாடு நடந்தது.இந்த ஆண்டு தமிழகத்தில் 14 இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பறவைகளை பாதுகாப்பதற்காக மாவட்டத்தில் குல்லுார் சந்தை, பிளவக்கல், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி, 6வது மைல் நீர்த்தேக்கம் உள்ளிட்ட 26 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் 3405 பறவை இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிறைந்து காணப்படுவதால் இந்த ஆண்டு முழுவதும் பறவைகள் அதிக அளவில் இனப்பெருக்கத்திற்காகவும், உணவிற்காகவும் வெளிநாடுகளில் இருந்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது, என்றார். வருவாய் கோட்ட அலுவலர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி செயலர் சிங்கராஜ், முதல்வர் வெங்கடேஸ்வரன், வனச்சரக அலுவலர்கள் சரண்யா, கார்த்திக் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
13 hour(s) ago
13 hour(s) ago