உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழியை சுற்றுலா தலமாக அறிவித்தும் வளர்ச்சி பணிகள் இல்லை

திருச்சுழியை சுற்றுலா தலமாக அறிவித்தும் வளர்ச்சி பணிகள் இல்லை

திருச்சுழி : திருச்சுழியை அரசு சுற்றுலா தலமாக அறிவித்து 6 ஆண்டாகியும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாததால் இங்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.திருச்சுழி ரமண மகரிஷி பிறந்த ஊர், நூற்றாண்டு புகழ் வாய்ந்த திருமேனிநாதர் கோயில், காசி, ராமேஸ்வரத்திற்கு ஈடான முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு உரிய குண்டாறு உட்பட, புகழ் பெற்ற புண்ய தலமாக இருப்பதால், அரசு 6 ஆண்டுகளுக்கு முன்பு சுற்று தலமாக அறிவித்தது. ஆனால், எந்தவித வளர்ச்சி பணிகள் இல்லாமல், சுகாதார கேடாக உள்ளது.திருமேனிநாதர் கோயிலை தரிசிக்க ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து செல்வர். ஆனால், கோயில் முன்பு வாகனங்கள் நிறுத்துவதற்குரிய வசதிகள் இல்லை. ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.மேலும், பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கோயிலின் வெளியே கழிப்பறை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

திறந்த வெளியில் தர்ப்பணம்

திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு அமாவாசை காலங்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். காசி, ராமேஸ்வரம் புண்ணிய தலங்களில் போன்ற புண்ணியம் திருச்சுழி குண்டாற்றில் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் என்ற ஐதிகம் உள்ளது. அமாவாசை காலங்களில் பல ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வருவர். ஆனால் ஆற்றில் தர்ப்பணம் செய்வதற்குரிய இடங்கள் எதுவும் இல்லை. திறந்தவெளியில் மணலில் அமர்ந்து தான் காரியங்கள் செய்ய வேண்டி உள்ளது.குளிப்பதற்கு குளியலறை, உடைமாற்றும் வரை என எதுவும் இல்லை. பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பஸ் ஸ்டாண்ட் இல்லை

ஆயிரக்கணக்கில் வெளியூர் பக்தர்கள் வந்து செல்லும் திருச்சுழியில் பஸ் ஸ்டாண்ட் இல்லை. 8 மாதங்களுக்கு முன்பு நரிக்குடி ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு இடம் பார்த்ததோடு சரி ஆனால் இன்று வரை அதற்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை. கோயில் எதிர்புறம் தங்கும் விடுதி உள்ளது. ஆனால் இதில் கழிப்பறை வசதிகள் செய்ய படவில்லை. மெயின் ரோட்டின் இருபுறமும் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டும் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் பயணிகள் வெயிலில் நின்று பஸ் ஏறும் அவலத்தில் உள்ளனர்.

தெப்பத்தில் கழிவுநீர்

கோயிலை சுற்றியுள்ள காம்பவுண்ட் பகுதியில் குப்பை கொடட்டுவது, பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. திருச்சுழி பெரிய கண்மாயிலிருந்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கோயில் தெப்பத்திற்கும் விவசாயத்திற்கும் தனியாக ஓடை அமைக்கப்பட்டு கண்மாயிலிருந்து தண்ணீர் வந்தது. இடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பசு மடத்து தெருவில் உள்ள கழிவுநீர் இந்த ஓடையில் விடப்படுவதால் தெப்பத்திற்கு கழிவுநீர் வந்து சேர்கிறது. ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது.

கழிப்பறை தேவை

ரோட்டின் அருகில் 2 கழிப்பறைகள் மட்டும் இருக்கிறது. கூடுதலாக கழிப்பறைகள் கட்டித் தரப்பட வேண்டும். திருச்சுழியில் கல்குவாரி லாரிகள் அதிக பாரத்துடன் செல்வதால் ரோடுகள் அடிக்கடி சேதமடைகிறது. ரோட்டை அகலப்படுத்தி தரமான ரோடு போட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி