உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்

திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்

திருச்சுழி: திருச்சுழி முத்து மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி மாரியம்மன் கோயிலில் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கிய மாசி திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.முன்னதாக யாகசாலை, வேள்வி பூஜைகள் நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மன் வெள்ளி, ரிஷபம், மயில், அன்ன வாகனம் உள்ளி விழா நாட்களில் அம்மன் வாகனங்களில் வீதி உலா நடக்கிறது.பிப்.23ல் பொங்கல் விழா நடக்கிறது. கோவிலில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை