ஏ.டி.எம்.மில் உதவுவதுபோல் பணம் திருட்டு பல இடங்களில் திருடிய இருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்துார்: வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து திருட்டில் ஈடுபட்ட குளித்தலை காட்ஜான் 23, சாத்தான்குளம் பீட்டர் பிரபாகரன் 32 ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, நவ. 26 அன்று பென்னிங்டன் மார்கெட் வளாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அவருக்கு உதவுவது போல் நடித்து, அவரது ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் பணம், நகைகடையில் தங்க நகைகளை இருவர் பெற்றனர்.இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் கரூர் மாவட்டம் குளித்தலை காட்ஜான் , துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பீட்டர் பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் இவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அக்.10ல் இதேபோல் ஒரு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் காட் ஜான் மீது புதுக்கோட்டை, வந்தவாசி, தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷன்களிலும், பீட்டர்பிரபாகரன் மீது சாத்தான்குளம், கும்பகோணம் ஸ்டேஷன்களிலும் வழக்குகள் உள்ளது.