உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் நா.த.க.,வினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் நா.த.க.,வினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் வக்ப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில ஒருங்கிணைப்பாளர் இசைமதிவாணன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன், வழக்கறிஞர் பாசறை துணைச் செயலாளர் பிரபாகர மூர்த்தி முன்னிலை வகித்தனர்.வக்ப் சொத்துகள் முஸ்லிம்களின் மத உடைமை. அதை பறிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள வக்ப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை