உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர்-மானாமதுரை ரயில் பாதை பணி 60 சதவீதம் நிறைவு

விருதுநகர்-மானாமதுரை ரயில் பாதை பணி 60 சதவீதம் நிறைவு

அருப்புக்கோட்டை : ''விருதுநகர் - மானாமதுரை அகல ரயில் பாதை பணிகள் 60 சதவீதம் நிறைவுற்ற நிலையில், 2012 பிப்ரவரிக்குள் பணிகள் முடிந்து, மார்ச்சில் ரயில் போக்குவரத்து துவங்கும்,'' என, தென்னக ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி விஜயகுமாரன் தெரிவித்தார்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கி, நடைபெற்று வரும் விருதுநகர் - மானாமதுரை அகல ரயில் பாதை பணிகளை விருதுநகரிலிருந்து 'டிராலி' மூலம் அருப்புக்கோட்டை வழியாக திருச்சுழி சென்று ஆய்வு செய்த அவர் கூறியதாவது: ரயில்பாதை மற்றும் பல்வேறு வகையான பணிகளில் 60 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை கால தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க, கான்ட்ராக்டர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது . அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் பணிகள் முடிந்து,மார்ச்சில் ரயில் போக்குவரத்து துவங்கும்,என்றார். தலைமை இன்ஜினியர் சர்மா, துணை தலைமை இன்ஜினியர் ரவிச்சந்திரன், தலைமை சிக்னல் டெலிகாம் இன்ஜினியர் இளவரசன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை