உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துணி நூல் பூங்கா அமைவதில் சிக்கல் : கட்டுப்பாடால் பயனாளிகள் தயக்கம்

துணி நூல் பூங்கா அமைவதில் சிக்கல் : கட்டுப்பாடால் பயனாளிகள் தயக்கம்

விருதுநகர் : துணி நூல் பூங்கா அமைய, பயனாளிகள் இடம் வாங்கினால் தான் செயல்படுத்த முடியும் என்பதால் ,திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 10 இடங்களில் ஒருங்கிணைந்த துணி நூல் பூங்கா அமைக்க திட்ட மிட்டுள்ளது. ஒரு பூங்கா அமைய மத்திய அரசு ரூ.36 கோடி , தமிழக அரசு ரூ.4 கோடி வழங்கும். திட்டம் செயல்படும் முன் சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. பூங்கா அமைய இடம் , உற்பத்திக்கான கட்டடத்தை,பயனாளிகளே சொந்த முதலீட்டில் உருவாக்க வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளான சுற்றுச்சுவர், ரோடு, கழிவு நீர் அகற்றுதல், குடி நீர், மின்சாரம், சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட வசதிகள் திட்டத்தில் செய்து தரப்படும். இதற்கான நிதியினை மத்திய அரசு மூன்று கட்டமாக வழங்கும். 20 சதவீத உற்பத்திக்கு பின் 10 சதவீத நிதியினை மாநில அரசு வழங்கும். துணி நூல் பூங்கா அமைய குறைந்தது 50 முதல் 100 ஏக்கர் நிலங்கள் தேவைப்படும் என்பதால், பயனாளிகளே நிலம் வாங்குவது, கட்டுமான பணிகள் மேற்கொள்வது என்பது சிரமத்தை ஏற்படுத்தும். இதற்கு பயனாளிகள் தயக்கம் காட்டுவதால், துணி நூல் பூங்கா அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி