மேலும் செய்திகள்
திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
9 hour(s) ago
மகர நோன்பு அம்பு விடுதல் விழா
9 hour(s) ago
கொத்தனார் பலி
9 hour(s) ago
விஜயதசமி விழா
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (அக். 3)
9 hour(s) ago
நரிக்குடி : நரிக்குடியில் தீயணைப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி பகுதி கிராமங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் உடனடி அணைக்க வழியில்லை. திருச்சுழி , அருப்புக்கோட்டையிலிருந்துதான் தீயணைப்பு வாகனம் வர வேண்டும். அந்த வாகனம் வருவதற்குள் முற்றிலுமாக எரிந்து விடுகிறது. எட்டு மாதங்களுக்கு முன் வீரசோழனில் 14 கடைகளில் தீப்பிடித்தது. திருச்சுழியிலிருந்து தீயணைப்பு வண்டி வருவதற்குள், பொதுமக்களே தீயை அணைத்தனர். நான்கு மாதங்களுக்கு முன் இருஞ்சிறையில் அரிசி மூடைகள் ஏற்றி சென்ற லோடு வேன் மின்கம்பி உரசி தீப்பிடித்தது. தீயணைப்பு வண்டி வருவதற்குள் வண்டி முழுவதும் எரிந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் பனைக்குடியில் வயலில் இருந்த வைக்கோல் தீப்படித்தது. அதுவும் முழுவதுமாக எரிந்து விட்டது. இதுபோல் பல்வேறு தீ விபத்துகள் நடந்து, முழுமையாக சேதமடைந்துள்ளது. நரிக்குடியில் தீயணைப்பு நிலையம் இருந்தால், ஓரளவிற்கு சேதங்களை குறைத்திருக்கலாம். இப்பகுதி கிராமங்களுக்கு முறையான சாலை வசதி இல்லை. திருச்சுழியிலிருந்து நரிக்குடிக்கு 15 கி.மீ., தூரம் வந்து, பின் சம்பந்தப்பட்ட ஊருக்குச் செல்ல குறைந்தது ஒரு மணிநேரம் மேலாகிவிடும். அதன் பின் தீயணைப்பு வாகனம் சென்றும் பலனில்லை. இதை தடுக்க நரிக்குடியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago