மேலும் செய்திகள்
திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
9 hour(s) ago
மகர நோன்பு அம்பு விடுதல் விழா
9 hour(s) ago
கொத்தனார் பலி
9 hour(s) ago
விஜயதசமி விழா
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (அக். 3)
9 hour(s) ago
விருதுநகர் : தமிழகத்தில் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் தொடரும் கொள்ளை முயற்சிகளை தடுக்க, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை சார்பில் தமிழகத்தில் 4500 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. விவசாயிகளுக்கு இந்த சங்கங்களில் நகை கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த நகைகள் கூட்டுறவு சங்கங்களில் பத்திரப்படுத்தப்படுகின்றன. கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தான் பெரும்பான்மையான கூட்டுறவு சங்க கட்டடங்கள் உள்ளன. இதனால், கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து கொள்ளை முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த கொள்ளை முயற்சியை தடுக்க, அந்தந்த மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு கூட்டுறவுத்துறை சார்பில் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில்,'' கூட்டுறவு சங்க கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில், பலமில்லாமல் இருந்தால், கட்டடத்தை உறுதிப்படுத்த உடனடியாக ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். செக்யூரிட்டி நிறுவன காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். லாக்கர் அறை எச்சரிக்கை அலாரம் ஒலிப்பதை தினமும் உறுதி செய்ய வேண்டும். பழுது ஏற்பட்டால், உடனடியாக சரி செய்ய வேண்டும். ஊருக்கு ஒதுக்குபுறத்தில் கட்டடங்கள் இருந்தால் பணியாளர்கள் தரப்பில் தொடர் கண்காணிப்பு இருக்கவேண்டும். நல்ல நட்புறவு ஏற்படுத்தி,கொள்ளை முயற்சி நடந்தால் ஊர் மக்கள் திரண்டு வந்து தடுக்க உதவும் வகையில் உறவுகளை மேம்படுத்தல் போன்ற முறைகளை சங்க செயலாளர்கள் மேற்கொண்டால், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் நடக்கும் கொள்ளை முயற்சிகளை தடுக்க முடியும், என கூறப்பட்டுள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago