உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விளையாட்டுத்துறைக்கு 200 பயிற்சியாளர் நியமிக்க முடிவு

விளையாட்டுத்துறைக்கு 200 பயிற்சியாளர் நியமிக்க முடிவு

விருதுநகர் : தமிழகத்தில் விளையாட்டுத்துறையில் 200 தற்காலிக பயிற்சியாளர்களை நிரந்தரம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட விளையாட்டு அரங்குகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதன் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு செய்து, அங்கு இல்லாத வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள் விளையாட்டு அரங்கு,சிந்தடிக் ஓடுதளம், விளையாட்டுகளுக்கு தேவையான மைதானங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பொது மக்கள் பங்களிப்புடன் நீச்சல் குளம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பங்களிப்பு இல்லாது பாதியிலேயே முடங்கிய நீச்சல் குளங்களுக்கும் அரசால் முழுமையாக நிதி ஒதுக்கப்பட உள்ளது. பயிற்சி வழங்க பயிற்சியாளர்கள் இல்லாத நிலையில், தற்காலிக பணியில் உள்ள 200 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை நிரந்தரம் செய்யவும் முடிவு செய்துள்ளது. மேலும், விளையாட்டுத்துறைக்கு கடந்த காலங்களை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியிடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ