உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / த.மு.எ.ச., சங்க மாநாடு

த.மு.எ.ச., சங்க மாநாடு

சிவகாசி : சிவகாசியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், விருதுநகரில் மாநாட்டு வரவேற்பு கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு செயலாளர் தேனி வசந்தன் முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்து சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், துணை தலைவர் சுந்தரமகாலிங்கம், துணைச்செயலாளர்கள் ராஜாராம், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வீடு, வீடாக சென்று மாநாட்டு தகவல் தெரிவிப்பது, நிதி வசூலிப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ரங்கசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ