உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வன நிலங்களின் எல்கை வரையறை இல்லாததால் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு

வன நிலங்களின் எல்கை வரையறை இல்லாததால் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு

விருதுநகர் : தமிழகத்தில் வன நிலங்களில் எல்கை வரையறை செய்யப்படாததால் வனங்களை ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்து வருகிறது. வனத்துறை நடவடிக்கை எடுக்குமா. தமிழகத்தில் வனப்பரப்புகள் 23 சதம் தான் உள்ளன. இதை 33 சதமாக அதிகரிக்க வேண்டும் என வனத்துறையினர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். வனப்பரப்புகள் இல்லாத இடங்களிலும் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தும் விதமாக ஊக்கதொகைகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வன ஆக்கிரமிப்பு:வன நிலங்களில் எல்கை முற்றிலும் வரையறை செய்யப்படாமல் உள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் வன நிலங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பல இடங்கள் குத்தகைக்கு பெறப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர். குத்தகைதாரர்கள் வனங்களில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். செயற்கை கோள் மூலமாக மலை மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளை துல்லியமாக சர்வே செய்து வன எல்கை வரையறை செய்ய முடியும். வனத்துறையினர் வன எல்கைகளை வரையறை செய்து, ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை