| ADDED : செப் 08, 2011 10:39 PM
விருதுநகர் : ரேஷன் கடை பணியாளர்கள் நியமனங்களுக்கு, எழுத்து தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.ரேஷன் கடை விற்பனையாளர், உதவியாளர்கள் பணியிட நியமனத்திற்கு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் பெற்று , இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதால், வயதானவர்களே பணிக்கு வருகின்றனர். பலர் இடையிலே நின்று விடுகின்றனர். இதை தொடர்ந்து, ரேஷன் கடை பணியாளர்கள் நியமனத்திற்கு, எழுத்து தேர்வு நடத்தி தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் தரப்பட்டு, தேர்வு நடக்கவுள்ளது.தேர்வு செய்யப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் செய்ய உள்ளனர். 18 வயது முதல் 32 வயதுடையவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். உள்ளாட்சி தேர்தலுக்குப் பின் எழுத்து தேர்வு நடக்க உள்ளது.