உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ்கள் ஓடவில்லை மக்கள் தவிப்பு

பஸ்கள் ஓடவில்லை மக்கள் தவிப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பஸ்கள் ஓடாததால் பயணிகள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பரமக்குடியில் இம்மானுவேல்சேகரன் ஜெயந்தி விழாவில் ஏற்பட்ட கலவரத்தால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் காந்திநகரில் பஸ் மறியல் செய்தனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அக்கட்சியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மதியம் 3 மணியிலிருந்து அருப்புக்கோட்டையில் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டன. இன்று திருமண நாள் என்பதால் விசேஷ வீட்டிற்கு வந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை