உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு

விருதுநகர் : விருதுநகர் பகுதியில் இரண்டு பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. ஆமத்தூர் பகுதியில் சங்கரன்கோவிலில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கல் வீசினர். இதில் முன் பக்க கண்ணாடி உடைந்தது. டிரைவர் ராஜேஸ்கண்ணன் விரலில் காயம் ஏற்பட்டது. இவரது புகார்படி ஆமத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். விருதுநகரிலிருந்து சுந்தரலிங்கபுரம் சென்ற அரசு டவுன் பஸ் மீது ராமன்குடும்பன்பட்டியில், மர்ம நபர்கள் கல்வீசியதில் முன் பக்க கண்ணாடி உடைந்தது. வச்சகாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ