உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆசிரியர் கவுன்சிலிங் நடத்த விதி முறைகள்

ஆசிரியர் கவுன்சிலிங் நடத்த விதி முறைகள்

விருதுநகர் : தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் செப். 16 முதல் 20 வரை நடக்கவுள்ளது. கவுன்சிலிங் நடத்துவதற்கான விதி முறைகள் அரசு வெளியிட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையை சர்ந்த ஆசிரியர்களுக்கு செப்.16 முதல் 20 வரையிலும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு செப். 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கவன்சிலிங் நடத்துவது குறித்து விதி முறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 3 ஆண்டுகள் அரசு பணியில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என்பது விதி முறை. 2011 ஜூன் முதல் தேதியிலிருந்து ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் முழுமையான வகையில் தயார் செய்யப்பட வேண்டும். இந்த பட்டியல் கவுன்சிங் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்பட வேண்டும். பள்ளி கல்வி, மாவட்ட தேசிய தகவல் மைய இணையதளத்திலும் வெளியிடப்பட வேண்டும். நிர்வாக மாறுதல் வழங்கப்படும் ஆசிரியர்கள் குறித்து புகார் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலரால் விசாரிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனை பதிவு செய்து பள்ளிக்கல்வி இயக்குனருக்கு வழங்கப்படும் அறிக்கை அடிப்படையில் மாறுதல் உத்தரவு வழங்கப்படும். இந்த நடவடிக்கை நிகழ்வு முடிந்த பின்னரே கவுன்சிலிங் குறிப்பிட்ட தேதிகளில் நடத்த வேண்டும். கவுன்சிலிங்கில் விண்ணப்பம் இல்லாமல் இட மாறுதல் வழங்க கூடாது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் முன்னதாகவே சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை